பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Tamils Tamil diaspora France
By Sumithiran Nov 09, 2022 09:53 PM GMT
Report

 பிரான்ஸில் ஆட்பற்றாக்குறையால் தடுமாறுகின்ற சில தொழிற்றுறைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றில் சட்டவிரோதமாக அல்லது போதிய ஆவணங்களின்றித் தொழில் புரிகின்ற வெளிநாட்டவருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு உரிய வதிவிட ஆவணங்கள் இன்றித் தொழில் புரிகின்ற ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

பேப்பர் இல்லாமல் அல்லது களவாக வேலை செய்தல்

பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி | Good News For Immigrants Tamils In France

பேப்பர் இல்லாமல் அல்லது களவாக வேலை செய்தல் என்று தமிழர்களால் குறிப்பிடப்படுகின்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டுக் குடியேறிகளை அந்தச் செய்தி பெரிதும் ஈர்த்திருக்கிறது.

ஆட்பற்றாக்குறையால் நெருக்கடியில் இயங்குகின்ற தொழிற்றுறைகள், அவற்றில் உள்ள வெற்றிடங்களின் புள்ளி விவரங்களை  ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தத் துறைகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு வதிவிட அனுமதி பெறுவதற்கு வாய்ப்புண்டு.

கொரோனா வைரஸ் நெருக்கடி

பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி | Good News For Immigrants Tamils In France

கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து உணவகங்கள் அருந்தகங்கள் மற்றும் ஹொட்டேல், உணவு விநியோகம் ஆகிய துறைகளை விட்டுப் பலர் வெளியேறியுள்ளனர். அதனால் இந்தத் துறைகள் பெரும் ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன.

தொழில் அமைச்சின் புள்ளிவிவரப்படி ஹொட்டேல் மற்றும் உணவகத் துறையில் சுமார் மூன்று லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. அதேபோன்று கட்டட வேலைகளில் 50 ஆயிரம் வெற்றிடங்களும், வாகன சாரதிகள் போன்ற போக்குவரத்துத் துறைகளில் 80 ஆயிரம் வெற்றிடங்களும் உள்ளன. இவற்றைவிட, மருத்துவப் பகுதி பராமரிப்பாளர்கள், முதியோர் பராமரிப்புப் போன்ற வீடுகளுக்குச் சென்று சேவை செய்வோர் போன்ற வேலைகளுக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவையாகவுள்ளனர்.

வதிவிட அனுமதிக்கான விண்ணப்பம்

 பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி | Good News For Immigrants Tamils In France

புதிய சட்டப் பிரேரணையின் படி இவற்றில் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டவர்கள் தங்கள் தொழில் வழங்குநரது அனுமதிக்குக் காத்திருக்காமலேயே தாங்களாக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் வேலை ஒன்றைத் தேடுவதற்கும் அவர்கள் ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டியது அவசியமில்லை. வதிவிட அனுமதிக் காலம் எவ்வளவு என்பது இன்னமும் தெரியவரவில்லை. வதிவிட அனுமதி கிடைத்தவர்கள் தங்கள் வேலைக் காலத்தில் பிரெஞ்சு மொழி கற்பதற்கு வேலை வழங்குநர்கள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி