வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Migrant Workers
By Harrish Dec 20, 2024 04:53 AM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காதை கடித்த நபர்

யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியின் காதை கடித்த நபர்

அநுர அரசாங்கம்

இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம்.

உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் புலம்பெயர்ந்தோர் அதேபோல் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி வாழ்பவர்களின் உரிமைகளுக்காகவே சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி தகவல் | Good News For Sri Lankans Abroad Anura Govt

பொருளாதார நெருக்கடியின் போது புலம்பெயர்ந்தோர் அந்நிய செலாவணி ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்திருந்தால் நெருக்கடி மேலும் தீவிரமடைந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறும் 3 பில்லியன் டொலர்களை காட்டிலும் புலம்பெயர்ந்து வாழும், தொழில் புரியும் எமது உறவுகளிடமிருந்து அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பல்களின் பெறுமதி 4.48 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.

கைதான பிரித்தானிய தமிழர் - இலங்கை செல்ல அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்

கைதான பிரித்தானிய தமிழர் - இலங்கை செல்ல அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்

நாட்டின் பொருளாதாரம்

மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் சற்று பின்னடைவு காணப்பட்டாலும், ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பலின் பெறுமதி 5,961.6 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இவர்களை மதிக்க வேண்டும். அவர்களின் உழைப்புக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி தகவல் | Good News For Sri Lankans Abroad Anura Govt

வாகன இறக்குமதியின் போது வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு விசேட சலுகை வழங்கப்படும் என்று கடந்த அரசாங்கம் குறிப்பிட்டது.

இருப்பினும் இதனூடாகவும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சட்ட ரீதியான முறையில் தென்கொரியாவுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு பதிலாக E - 8 முறைமை ஊடாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனால் பல சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன.இவ்விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனேடியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                     
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023