கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்
பதவி விலகலுக்கு நிபந்தனை
எதிர்பாராத திருப்பமாக, சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கிடைத்தள்ள ஆதாரங்களின்படி, எதிர்க்கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் இந்த ஆலோசனையை ஏற்கத் தயாராக இல்லை.
மூன்று நாட்களுக்கு முன்னர், அரச அதிபர் சபாநாயகரிடம் பேசி, புதன்கிழமை பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், கடந்த 40 மணி நேரத்தில், அவர் புதன்கிழமை ராஜினாமா செய்வது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழி
ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு தானும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழியை விரும்புகிறார்.
அரச அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, விமான நிலையத்தின் சர்வதேச பிரமுகர் புறப்படும் இடத்தில் குடிவரவு திணைக்களம் மற்றும் விமான நிலைய ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ராஜபக்சாக்கள் வெளியேறுவதைத் தடுக்க பட்டுப்பாதை விஐபி வழித்தடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் சேவைகளை நிறுத்தியுள்ளனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
