கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Beulah
கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் உயர் நீதிமன்றமானது முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
அவ்வகையில், போராட்டத்தின்போது நாடளாவிய ரீதியில் அவசர நிலைமையை அமுல்படுத்துவதற்கு அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஆட்சேபனை தாக்கல்
அதன்படி, இன்று முதல் எட்டு வாரங்களுக்குள் உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி