ரணிலுக்கு ஆதரவு கோரிய கோட்டாபய : அம்பலப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவே (Gotabaya Rajapaksa) தன்னிடம் கூறியதாக முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனியார் சமூக வலைதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கட் நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக தாம் போராடிய போது தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) ஊழல்வாதிகளை பாதுகாத்தார்.
அரசியல் அழுத்தங்கள்
இதன்போது அவர்களுடன் இணைந்து தமக்கு எதிராக செயற்பட்டார் அத்தோடு கண்டி மகாவலி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பகுதியை தனது நண்பர் ஒருவருக்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க ஒருமுறை தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் ராஜபக்ச தரப்பும் தனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு வந்தனர்.
குடும்ப அரசியலில் மூலம் அவர்கள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான ஊழல்வாதிகளுடன் அரசியல் செய்ய தாம் தயாரில்லை அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |