கோட்டாபயவை பீடித்த நோய்கள் முழுவதும் குறைந்தன
Gotabaya Rajapaksa
Wimal Weerawansa
President of Sri lanka
By Sumithiran
அனைத்துவகை நோய்களில் இருந்தும் விடுதலை
அதிபர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனான சிநேகபூர்வ உரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோட்டாபய எடுத்த தீர்மானங்கள்
கோட்டாபய ராஜபக்ஷ நோய்வாய்ப்பட்டு குணமடைந்து வருகின்ற போதிலும், அவர் எடுத்த தீர்மானங்களாலும் தேவையான தீர்மானங்கள் சரியான நேரத்தில் எடுக்கப்படாததாலும் மக்கள் இன்று இந்த அனைத்து நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி