அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Sumithiran
மூடப்பட்ட ஹோட்டல்கள்
எரிவாயு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் 60 வீதமான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அவர்களிடமிருந்து எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரச தலைவரும் பிரதமரும் இதுவரை எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை எனவும் அசேல சம்பத் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான அறிவிப்பு
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் உணவுப் பொதியை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
