அலுவலகத்தில் நாற்காலிக்காக சக ஊழியர் மீது துப்பாக்கி பிரயோகம் - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
Government Employee
India
By pavan
இந்திய மாநிலம் ஹரியானாவில் நாற்காலியை தரமறுத்த ஊழியரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பணியாற்றி வருபவர் அமன். இவரது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விஷால் என்பவர் நாற்காலியை தரமறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய விஷாலை பின்தொடர்ந்த அமன், திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
நாற்காலி சண்டை
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான விஷால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷாலை தேடி வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி