அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் - வெளியாகிய புதிய தகவல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் அனுமதி கோரி குறித்த பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறை
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
