இராஜாங்க அமைச்சர்களுக்கு மாதம் 10 கோடி செலவு! வெளியான அதிர்ச்சித் தகவல்
Parliament of Sri Lanka
By pavan
இலங்கையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்து வருவோரை அந்த பதவியை விட்டு விலகுமாறு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல கோரியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களுக்காக மாதமொன்றுக்கு பத்து கோடி ரூபா செலவிடப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக காணப்படும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
கடந்த மே மாதம் முதல் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெட் ஸ்கேனர் ஊடாக செய்யப்படும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.
இதனை தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொண்டால் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படும்.
இதன் விரிவான செய்திகளை தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
