அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 32000 ஊழியர்கள்..!
கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32000 ஊழியர்களும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (9) நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த ஊழியர்கள் தற்போது பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடு செல்ல பரிந்துரை
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
