விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

By Vanan Oct 28, 2022 12:17 PM GMT
Report

உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரித கடன் திட்டத்தின் கீழ் 13,000 தொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள் பலவற்றின் நன்கொடைகளுக்கு மேலதிகமாகவே உலக வங்கியிடமிருந்து இந்தக் கடன் கிடைத்துள்ளது.

யூரியா உர விநியோகம்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! | Govt Gives Good News To Farmers Urea Fertilizer

இலங்கையில் பெரும்போக நெற்செய்கைக்கு சுமார் 150,000 தொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. அதனை முழுமையாக விநியோகிக்க முடியுமென விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சுரேன் படகொட ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விவசாய சேவை மையங்கள் மூலம் இந்த உரங்கள் வயல் உரிமையாளர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. நெல் உரிமையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2 ஹெக்டெயார் வரையான உரங்கள் வழங்கப்படுகிறன.

அதனடிப்படையில் விவசாயி தான் பயிர்செய்யும் நிலப்பரப்புக்கு ஏற்ப உர மூடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். கமத்தொழில் திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், வேளாண்மை செய்யப்படும் வலயத்தைப் பொறுத்தே விவசாயி ஒருவரால் கொள்வனவு செய்யப்படும் அதிகபட்ச உரத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

சோளப் பயிர்செய்கை

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! | Govt Gives Good News To Farmers Urea Fertilizer

மேலும், சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 60,000 ஹெக்டெயார்களுக்கு அவசியமான 12,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக வழங்கப்படும் 50 கிலோ யூரியாவின் விலை 15,000 ரூபாவாகும்.

உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் மற்றும் பூகோள அரசியல் நிலைமைகள் காரணமாக உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக மிகவும் சவாலானதொரு சந்தை நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்தை விலை உயர்வுக்கு மத்தியிலும் விவசாய அமைச்சு, 12,500 மெட்ரிக் தொன், 50,000 மெட்ரிக் தொன் மற்றும் 45,000 மெட்ரிக் தொன் யூரியாவை மூன்று கட்டங்களாக விநியோகிப்பதற்காக மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

யூரியா கொள்முதல் ஒப்பந்தம்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! | Govt Gives Good News To Farmers Urea Fertilizer

இதேவேளை மேலும் 25,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றும் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

அத்துடன் சலுகைக் கடன் அடிப்படையில் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 21,000 மெட்ரிக் தொன் யூரியா பெரும் போகத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஆதரவுடன், துறைமுகங்களில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கும், விவசாய சேவை மையங்களில் இருந்து விவசாயிகளுக்கும் உரங்கள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க விசேட கட்டமைப்பொன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தக் கட்டமைப்பு சுற்றாடல் மற்றும் சமூக பாதுகப்பு மேலாண்மை, குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பாதிப்புகளை கண்காணிப்பதற்காக பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026