யாழில் நடைபெற்ற புற்றுநோய் தொடர்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!
Cancer
Jaffna
Jaffna Teaching Hospital
By Pakirathan
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும், 200 நூறாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் யாழ். பரியோவான் கல்லூரியும் இணைந்து குறித்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடைபவனி
நடைபவனியானது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை வந்தடைந்து மீண்டும் யாழ். பரியோவான் கல்லூரியை சென்றடைந்தது.
இதில் கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், வைத்தியசாலை மற்றும் சமூகம் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்