படகு கவிழ்ந்து விபத்து ஆசிரியர்கள் மாணவர்கள் என 16 பேர் பலி : குஜராத்தில் பெரும் சோகம்
குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள ஹரினி ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், இரண்டு ஆசிரியர் மற்றும் 14 மாணவர்களென16 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஹரணியில் உள்ள மோட் நாத் ஏரியில் தனியார் பாடசாலையைச சேர்ந்த மாணவர்கள் படகு சவாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், 23 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் சென்றுள்ளனர்.
எதிர்பாராத விதமாக படகு மூழ்கி
அப்போது எதிர்பாராத விதமாக படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் பலியாகினர். மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், ஏரியில் இருந்த 5 மாணவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் ஏரியில் தேடுதல் பணியை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனர்.
குஜராத்தில் பெரும் சோகம்
குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசியம் அழிந்து போய்விடும் : அபாய அறிவிப்பை வெளியிட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன்
சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அளித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |