தங்க விலையில் அதிரடி மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
Gold Price in Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Gold
By Sathangani
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் தங்க விலையானது 10,000 ரூபாயினால் குறவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கப் பவுண்
நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன் இன்று 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நேற்றைய நாளில் 22 கரட் தங்கப் பவுண் 314,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |