வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஆதரவு
வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights - TCHR, Est.1990) பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹர்த்தாலிற்கு முழு ஆதரவு

“எதிர்வரும் செவ்வாய்கிழமை 25 ஏப்ரல் 2023இல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன், மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இந்த ஹர்த்தாலிற்கு உங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இந்த ஹர்தலை முன்னின்று நடத்தும் அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் எமது சிநேகபூரமான நட்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் அதேவேளை, உங்கள் இது போன்ற பணிகள் தொடர வேண்டுமென தாழ்மையாக வேண்டி கொள்கிறோம்.
நாட்டில் வாழும் எமது உறவுகள் எந்தப் பாகுபாடுமின்றி ஹர்த்தாலில் பங்குகொண்டு மிகப் பெரிய வெற்றியை சிங்கள பெளத்த அரசிற்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்” - என்றுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்