HMPV வைரஸ் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
தற்போது சீனா (China) முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri Jayewardenepura) நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில் அதிகம் பரவும்
அத்துடன் அந்த வைரஸ் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கண்டி (Kandy) மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |