இலக்கு வைக்கப்படும் பொதுமக்கள் -ரஷ்ய படைமீது கடும் குற்றச்சாட்டு
attack
people
russia
ukraine
war
nato
By Sumithiran
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்ய படைகள் குறிவைப்பதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ரஷ்யா சண்டையை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த போரை பரப்புவதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். “உக்ரைனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது எமது கடமை. எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை ரஷ்ய தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், லாட்வியன் அதிபர் ஈகில்ஸ் லெவிட்ஸுடனான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி