யாழில் ஆரம்பமாகியுள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி!
Jaffna
Sri Lankan Schools
By Pakirathan
யாழ் கல்விக் கண்காட்சி 2023 என உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்விக் கண்காட்சி 1 ம் 2 ம் திகதிகளில் தொடர்சியாக இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன், வடக்குமான கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தின் தூதரக பதில் தூதுவர் ராம் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சி
இந்த கல்விக் கண்காட்சியில் பல சர்வதேச கல்வி நிறுவனங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக தமது ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் பலர் இக் கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிடுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.



4ம் ஆண்டு நினைவஞ்சலி