வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை - வெடித்த சர்ச்சை
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் (Ukantha Murugan kovil) ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
திட்டமிட்ட சதி
உகந்தைமலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு வைக்கப்பட்டது? என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளைனர்.
கதிர்காமம் போல் உகந்தை மலையையும் மாற்றுவதற்கு திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்றும் இந்து மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் ஒன்றான உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் குன்றில் முளைத்துள்ள சிலை பௌத்த ஆக்கிரமிப்பின் மற்றொரு அங்கம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
