அந்தமானில் மோடி பெயரிட்ட விடுதலைப் புலிகளின் வரலாறு
இந்தியாவின் அந்தமான் தீவுக் கூட்டங்களில் உள்ள 26 பெரிய தீவுகளுக்கு இதுவரை இருந்த பழைய பெயர்கள் மாற்றப்பட்டு புதிய பெயர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்றைய தினம்(23) சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தியில் இலங்கையுடன் சம்பந்தப்பட்ட என்ன விடயம் இருக்கும் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படும் நிலையில், அதற்குரிய விளக்கத்தையும் கூறியே ஆக வேண்டும்.
விடுதலைப் புலிகளின் வரலாறு
அவ்வாறாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்றைய தினம் சூட்டப்பட்ட பெயர்களில் ஒன்று விடுதலைப் புலிகளின் வரலாற்றையும் அந்தமானில் நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு பின்னர் அந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப தோல்வியையும், விடுதலைப் புலிகளை அழிக்கும் இந்தியப் படையினரின் மேலாதிக்கப் போக்கும் ஒரு கட்டத்தில் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதலை 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வெடிக்க வைத்திருந்தது.
அவ்வாறு மோதல் வெடித்து ஒரு மாதத்தில் பெரும் படை அணியுடன் சென்ற மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் அணி, குறைந்தளவு வீரர்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் அணியை எதிர்கொண்டது.
இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த மோதலில் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் கொல்லப்பட்டார்.
பரம் வீர் சக்ரா
அவருக்கு இந்தியாவின் அதியுயர் இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதும் பல ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தமானில் இருக்கும் ஒரு தீவுக்கு பரம் வீர் சக்ரா பரமேஸ்வரன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்திவீச்சு,
