நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!
Sri Lankan Schools
By Kiruththikan
எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதன் படி, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் குறித்த தினத்துக்கான பாடசாலை நடவடிக்கையை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
