ஊடக துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர் யுவதிகளுக்கான களம்..! கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்
ஐபிசி தமிழ்
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஐபிசி தமிழ் ஊடகத்தில் பணியாற்றுவதற்காக திறமையான, துடிப்பான மற்றும் ஆர்வம் உள்ள இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஊடகத்துறையில் சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக இது அமையும்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல திறமைசாலிகளை எமது ஊடகம் எதிர்பார்க்கின்றது.
செய்தி ஆசிரியர், வீடியோ எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பிரிவுகளிலும் சாதிக்கத்துடிக்கும் மிகவும் திறமைசாலிகளை தெரிவு செய்ய ஐபிசி ஊடகம் காத்திருக்கின்றது.
உங்களுக்கு இந்த துறையில் மிளிர வேண்டும் எனில் எம்மோடு இணைந்து பயணித்திட நேர்காணலில் நீங்களும் பங்கு பெற்றலாம்.
ஐபிசி தமிழின் யாழ். கலையகத்தில் 10.11.2022 மற்றும் 11.11.2022 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு 0212030600 என்ற இலக்கத்திற்கு உடன் அழையுங்கள்.