டி20 உலகக் கிண்ண இறுதி போட்டி நடைபெறுமா - அறிமுகமாகும் விதிமுறைகள்
எட்டாவது ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தற்பேது நடைபெற்று வருகின்றது.
இத்தொடரின் இறுதிப் போட்டி நாளையதினம் (13) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன .
விதிமுறை மாற்றம்.
மழை காரணமாக போட்டியை முடிக்க அதிக நேரம் தேவைப்பட்டால், போட்டி ஏற்பாட்டு தொழில்நுட்பக் குழு (ETC) விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேரத்தினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை போட்டி நிறைவடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மேலும் தேவையான பந்துவீச்சிகள் குறைக்கப்படும் என குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியை நடாத்த தேவையான குறைந்தபட்ச பந்துவீச்சுக்களை ஞாயிற்றுக்கிழமை வீச முடியாவிட்டால் மட்டுமே போட்டி மற்றொரு நாளுக்குள் செல்லும். அந்நாளில் ஆட்டம் பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட போட்டி நாளின் ஆட்டத்தின் தொடர்ச்சியாக காணப்படும்.
மழை பெய்ய வாய்ப்பு
தற்போது ஞாயிற்றுக்கிழமை 15 முதல் 25 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு 95 சதவீதமும், திங்கட்கிழமை 5 முதல் 10 மி.மீ வரை 95 சதவீத மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை குறைந்தது 10 ஓவர் பந்துவீச்சுகள் முலம் ஒரு பக்க ஆட்டத்தை நடத்த சாதகமான வானிலை காணப்படாதபட்சத்தில், போட்டி சமநிலைப்படுத்தப்பட்டு கோப்பையை இரு அணிக்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
