கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி சான்றுப்பொருட்கள் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Final War
By Sathangani Aug 10, 2025 11:00 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட  சான்றுப்பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வழக்கு இல: AR/804/23 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது. காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகும்.

சிறைக்குள் பிள்ளையானின் கடிதத்தில் ஒப்பம் இட்டது யார்! குழப்பத்தில் புலனாய்வாளர்கள்

சிறைக்குள் பிள்ளையானின் கடிதத்தில் ஒப்பம் இட்டது யார்! குழப்பத்தில் புலனாய்வாளர்கள்

மனிதப் புதைகுழி மீதான விசாரணை

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தல், நிருவகித்தல் மற்றும் கருமங்களை ஆற்றுதல்) சட்டத்தின் பிரிவு 12 (ஆ) இன் கீழ், OMP அதன் கடப்பாடுகளின்படி, மனிதப் புதைகுழி மீதான விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி சான்றுப்பொருட்கள் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Identify The Kokkuttoduwai Human Burial Evidence

இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது.

புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

உள்ளாடைகள், காற்சட்டைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கத் தகடுகள், நாய் களுத்துப்பட்டிகள், முழு நீளக்காற் சட்டை, மேற் சட்டை, உலோக வளையல். ரீசேட் ஆகிய 45 வகையான சான்றுபபொருட்களை அடையாளப்படுத்த உதவவும்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி சான்று பொருட்களை இனம் கானும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிகளிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் குறித்த சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் அம்சங்கள், உடைகள், முந்தைய காலங்கள் ஏற்பட்டிருந்த காயங்கள் போன்றவற்றை விவரிக்க முடியும்.

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : யாழ் போதனாவில் உடற்கூற்று பரிசோதனை

இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : யாழ் போதனாவில் உடற்கூற்று பரிசோதனை

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

வழங்கும் தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில் நேர்காணல் செய்வார்கள்.

அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும் (பிரிவு 12 (இ) (V)) சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் (பிரிவு 13(1) (எ) மற்றும் 18) OMP கடமைப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும் வழங்கப்படும்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி சான்றுப்பொருட்கள் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Identify The Kokkuttoduwai Human Burial Evidence

இது தொடர்பான தகவல்களை இலக்கம் 40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல 54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி ஆகிய அலுவலங்களில் 05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி வரையில் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அல்லது ராஜகிரிய 0112861431,மாத்தறை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229 , யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2025 சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

2025 சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025