ஐ.எம்.எவ் கடனுதவி - அமெரிக்காவின் அறிவிப்பு வெளியானது
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான நீடிக்கப்பட்டுள்ள கடனுதவிக்கான அனுமதியை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், அது பொருளாதார மீட்சிக்கான வழியாக இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பில் நேற்றைய தினம் (21ஆம் திகதி) தனது டுவிட்டர் கணக்கில் நல்ல செய்தி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1/2 The US welcomes the approval of Sri Lanka’s IMF package; great news & an important step on the road toward economic recovery. The govt of SL will need to continue reforms and conclude debt restructuring agreements to ensure the program – and the economy – stay on track.
— Ambassador Julie Chung (@USAmbSL) March 20, 2023
இதற்கிடையில், ஐ.ஐ. எம். எஃப். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான துணைத் தலைவர் மார்ட்டின் கிரேஷரும் நேற்று (21ஆம் திகதி) தனது ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருந்தார்.
