பொருளாதார மீட்சிக்கான ஒரு மைல் கல்லே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த முடியுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைக் கருதலாம் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மீட்சி
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுக்கு அமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை அடைவதற்கு அனைத்து தரப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
