“இலங்கைக்கு செல்லுங்கள்” என வலியுறுத்தும் ஜெய்சங்கர்
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை விட, அதிகளவான தொகையை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்புவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது, இந்தியா அதிகளவான உதவிகளை செய்திருந்ததாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய பொருளாதார நெருக்கடி
ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வராத போது, இந்தியா தனது அயல் நாட்டுக்கு உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இந்தியா மீது இலங்கை மக்கள் கொண்டிருந்த நல்லெண்ணத்தை மேம்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"When the rest of the world turned its back on Sri Lanka, the only country that came forward (was India)...we committed $4 1/2 bn to Sri Lanka.." says EAM Jaishankar @DrSJaishankar. Adds,'what we did was 50% bigger than IMF..' pic.twitter.com/O72YtS0VVy
— Sidhant Sibal (@sidhant) January 30, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |