கனடாவில் ஸ்வெட்டர் பாவிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Canada
By pavan
கனடாவில் சில வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல ஸ்வெட்டர் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்வெட்டர் வகைகள் விரைவில் தீப்பற்ற கூடியவை என கனேடிய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
130000 ஸ்வெட்டர்
இதனால் இந்த வகை ஸ்வெட்டர்களை சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையால் சுமார் 130000 ஸ்வெட்டர் வகைகள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளன.
இந்த வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் இதனை பயன்படுத்தும் நபர்கள் அவற்றை நிறுவனத்திடம் ஒப்படைத்து பணத்தை மீள பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி