இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கும் உணவகங்கள்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்ச்சையான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வழிக்காட்டியுடன் பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு பெற சென்றுள்ளார்.
மோசமான முறை
5000 ரூபாவுக்கு உணவு உட்கொண்ட பெண்ணுக்கு பொய்யான விலை பட்டியல் கொடுத்து 35000 ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு உணவக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையடுத்து உணவகத்தில் மிரட்டி பணம் பறிப்பதை சுற்றுலா வழிக்காட்டி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த ஹோட்டல் ஊழியர்கள் மிகவும் மோசமான முறையில் நடந்துக்கெண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Other side trying to bring tourists to boom tourism, another side damaging Sri Lanka culture with these people pic.twitter.com/iVg20tOyv3
— Mohamed Fazil ?? (@fazil03) February 23, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |