வவுனியாவில் தொழுநோயாளர்கள் அதிகரிப்பு
வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார்.
இன்று (27) வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தொழுநோய் தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவ உதவிகள்
இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் அதிகமாக 69 தொழு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் தெரிவித்திருந்தார்.
இக்கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |