ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு - அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட நிகழ்வு!
"அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடகம் மற்றும் கட்டுக்கதையாகும்."
இவ்வாறு, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்டுக்கதைகள்
தொடர்ந்து அவர்,
"மாபெரும் மக்கள் போராட்டங்களை தவிர்க்கவும், தேர்தலை பிற்போடவும் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நிகழ்வே இந்த ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.
இலங்கை மத்திய வங்கியும் தற்போது சுயாதீனமாக செயற்படுவதில்லை, அரசாங்கத்தின் உந்துதலின் மூலமே செயல்படுகின்றது.
டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றில் இருந்து நாடு மீண்டு வருவதாக வெளியில் காட்டுவதற்கும், தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் வைத்திருப்பதற்கும் இவ்வாறான பல கட்டுக்கதைகளை அரங்கேற்றப் பார்க்கின்றனர்." என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.
