ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடு
Election Commission of Sri Lanka
Election
By Jaso
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.13 பி.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 42 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை
இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.13ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 408 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் பல்வேறு அரசியல் கட்சிகளினாலும் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்