இலங்கையை கட்டுப்படுத்த புது வியூகம் - இந்தியாவின் அதிரடி நகர்வு..!
இலங்கை மத்திய வங்கி, இந்திய ரூபாய்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம் என்ற ஒரு நடைமுறை வருகின்றது என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காலப் போக்கில் இந்திய ரூபாய்தான் முற்றிலுமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் எல்லாமே பொருளாதார நெருக்கடியின் பின்னர் வந்த மாற்றங்கள் தான்.
ஆனால் இது எந்தளவிற்கு இலங்கை ரூபாவின் பெறுமதியை உயர்த்தும் அல்லது இலங்கை தன்னிறைவு பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும், எந்த அளவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. ஏனெனில் அதற்கான எந்தவிதமான செயற்றிட்டங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு வந்தால் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் ரூபாவின் பெறுமதி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் பத்திரிகையாளர் நிக்சன் விரிவாக விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவி்க்கையில்,
