எம்மை கருணைக் கொலை செய்யுங்கள்- திருச்சி சிறப்பு தடுப்பு முகாம் ஈழத் தமிழர்கள் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!
இந்தியா தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை ஆரரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திதகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இன்றைய தினம் போராட்டக்காரர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக உறுதிமொழி வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






