வல்லாதிக்க சக்தியாக உருவெடுக்கும் இந்தியா..! கேள்விக்குறியாகும் அமெரிக்காவின் நட்பு வட்டாராம்
நாடுகளுக்கு இடையேயான இராஜாங்க ரீதியிலான உறவுகளில் தனித்துவமான கொள்கைகளை கொண்டுள்ளது. இதனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு வட்டாரத்தில் நீண்டகாலம் இருக்காது என அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கம்ப்பெல் கூறினார்.
மாறாக இந்தியா மிகப்பெரிய சக்தி வாய்ந்த சுதந்திரமான நாடாக மாறும். தற்போதைய சூழலில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று(9) ஆஸ்பென் பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் அவரிடம் இந்தியா பற்றி கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது மேற்கூறியவாறு தெரிவித்திருந்தார்.
இராஜாங்க ரீதியில் உறவு
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அமெரிக்கா-இந்தியா இடையே இராஜாங்க ரீதியில் நல்ல உறவு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா எந்த நாடுகளுடன் இவ்வளவு ஆழமான அதேநேரத்தில் பலப்படுத்தப்பட்ட உறவை கொண்டிருக்கவில்லை என நினைக்கிறேன்.
இருநாடுகளும் தொழில்நுட்பம் உள்பட பிற விஷயங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இது இருநாடுகளின் மக்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தும். 21ம் நூற்றாண்டில் அமெரிக்கா-இந்தியா நாடுகளின் உறவு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அதேநேரத்தில் இந்தியா என்பது தனித்துவமான இராஜாங்க ரீதியிலான கொள்கைகளையும், உறவுகளையும் கொண்டுள்ளது. இதனால் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக நீண்டகாலம் இருக்காது. மாறாக இந்தியா மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக மாறக்கூடும்.
மிகப்பெரிய சக்தியாக இந்தியா
மேலும் சுதந்திரமான நாடாக இந்தியா செயல்படும். தற்போதைய சூழலில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாற வேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போதைய சூழலில் அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு என்பது நன்றாகவே தொடர்கிறது.
அதோடு ஒவ்வொரு பிரிவுகளிலும் இருநாடுகளும் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா, இந்தியா நாடுகள் கடந்த காலங்களில் பல சவால்கள், பல தடைகளை சந்தித்துள்ளன. இருப்பினும் இருநாடுகளும் லட்சியத்தின் அடிப்படையில் பல துறைகளில் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளன.
இதற்கு இருநாடுகள் இடையேயான உறவு தான் காரணம். விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என அனைத்து விஷயங்களிலும் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது.
சீனா விவகாரம்
சீனா விவகாரத்தில் குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசி கொண்டனர். மேலும் இந்தியா-அமெரிக்காவின் உறவு என்பது சீனா ஏற்படுத்தும் பதற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இது இயல்பாக இருநாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளாலும், ஆழ்ந்த புரிதலின் மூலமாகவும் உருவானதாகும்.
என்னை பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும். மேலும் அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஷ் 2023ல் குவாட் அமைப்பு (இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் குழு) மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் நிலவரங்களோடு எங்களையும் ஒருங்கிணைக்க செய்யும்.
சீனாவின் ராணுவ சூழ்ச்சி
சமீபகாலமாக சீனாவின் ராணுவ சூழ்ச்சி அண்டை நாடுகளிலும், இந்தோ-பசிபிக் பகுதியிலும் உள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை சீனா கடைப்பிடிக்கிறது. தாய்வான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளுக்கும், தெற்கு சீனக்கடல் முழுவதுக்கும் சீனா உரிமை கோருகிறது.
தெற்கு சீன கடலில் சீனா செயற்கை தீவுகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. மேலும் கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுடன் சீனாவுக்கு மோதல் உள்ளன.
இதனால் இருநாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு குவாட் அமைப்பில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசினர்.” என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
