சர்ச்சையை ஏற்படுத்திய விடுதி அறை காணொளி..! தக்க பதிலடி கொடுத்த விராட் கோலி (காணொளி)
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தங்கிய விடுதியின் அறையை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் கோலி ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் அங்கு தங்கியுள்ள விடுதியில் அவரது அறையின் காணொளி வெளியாகி உள்ள நிலையில் தற்போது அது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
Virat Kohli has shared disturbing footage of what appears to be strangers recording a video in his hotel room.
— Nic Savage (@nic_savage1) October 31, 2022
? Instagram/virat.kohli#T20WorldCup pic.twitter.com/Cq9Dr2uzWc
குறித்த காணொளிக்கு பதிலளித்த விராட் கோலி,
“ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகமடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன்.
விடுதி அறை காணொளி

ஆனால் இங்குள்ள இந்த காணொளி எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் சித்தப்பிரமையாக உணர வைத்தது.
எனது சொந்த விடுதி அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்.
தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்களை பொழுது போக்கிற்கான பண்டமாக கருத வேண்டாம்,” என விராட் கோலி தெரிவித்துள்ளார்.