நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Jaffna
Sri Lanka
India
By Harrish
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்களது வழக்கு இன்றையதினம்(21) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதான 8 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்