இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி! டக்ளஸின் யோசனைக்கு சந்திரசேகர் விசனம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் முன்வைத்த யோசனை பொருத்தமற்றது என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் செயற்பாடு அதிகரித்து கொண்டு செல்கிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள்
அதேபோன்று, அத்துமீறலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தில் இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு பணம் அறவிட்டு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கலாம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு, டக்ளஸ் முன்வைத்த யோசனை இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையாது என புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸின் யோசனை படி, செயற்பட்டால் இலங்கை கடற்பரப்பை முற்றாக திறந்து விட்டதற்கு சமன் என புதிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |