சுமந்திரன், சாணக்கியனை திடீரென சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பில் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலின்படி, இலங்கை-இந்திய உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்
இலங்கையில் அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்திய உயர் ஸ்தானிகரின் சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
High Commissioner met Ilankai Tamil Arasu Katchi (ITAK) General Secretary @masumanthiran and MP Hon @ShanakiyanR. Discussions focused on widening 🇮🇳 🇱🇰 ties, as well as the recent political developments in Sri Lanka.@MEAIndia@IndianDiplomacy pic.twitter.com/sWIeWiXQR4
— India in Sri Lanka (@IndiainSL) November 15, 2025
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |