உலக வங்கியின் தலைவரான இந்தியர் - குவியும் பாராட்டுக்கள்
உலக வங்கியின் ஆளுநர்கள் சபையின் புதிய தலைவராக அஜய் பங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, 5 வருட காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜய் பங்கா சுமார் 24,000 பணியாளர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பான Mastercard இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றினார்.
14 ஆவது தலைவராக அஜய் பங்கா
இந்த நிலையில் உலக வங்கியின் 14 ஆவது தலைவராக அஜய் பங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார நிபுணர் மற்றும் டிரம்ப் அரசாங்கத்தில் பணியாற்றிய அமெரிக்க திறைசேரியின் அதிகாரியுமான இவர் ஜூன் 2 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவிற்கு தற்போது அனைத்து மட்டங்களில் இருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
