கைத்தொழில் துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை
இவ்வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் ஏற்றுமதியை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கைத்தொழில் அமைச்சு (Ministry of Industry) தெரிவித்துள்ளது.
கிராமிய உற்பத்தியாளர் படையணியை ஏழு வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி
கைத்தொழில் துறையில் இணையும் இளம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவிருப்பதுடன் நவீன தொழில்நுட்பம் குறித்து அவர்களுக்கு தெளிவூட்டல்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் 1,165.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்திருந்தது.
கடந்த வருடத்தின் (2023) ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4.18 சதவீத வளர்ச்சியாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், தொழிற்சாலை ஆடைகள், தேயிலை, றப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் தொடர்பான பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட ஏற்றுமதிகளின் வருவாய் அதிகரிப்பு காரணமாக இந்த வளர்ச்சி எட்டியிருந்நதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |