மேலும் அதிகரித்தது இலங்கையின் பணவீக்கம்!!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரவியல் அறிக்கையின் படி இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் 33.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது, கடந்த மே மாதம் 45.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் 45.1 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கமானது, கடந்த மே மாதத்தில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஏப்ரலில் 23.9 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கமானது, கடந்த மே மாதம் 34.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும்,
ஏப்ரல் மாதம் 17.5 சதவீதமாக காணப்பட்ட ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கமானது, கடந்து மே மாதம் 25.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் 52.5 சதவீதமாக பதிவாகியிருந்த போக்குவரத்துடன் தொடர்புடைய பணவீக்கமானது, மே மாதம் 76.7 சதவீமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

