இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு: ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Bandula Gunawardane Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Kiruththikan Jun 21, 2022 02:04 PM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

சர்வதேச நாணயத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் தற்போதுள்ளதை விட பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதே எமது இலக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாத நிலை

இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு: ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | International Case Against Sri Lanka

 அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின் முதன் முறையாக வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையின் போது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது.

எனவே தான் இது குறித்த சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு சர்வதேச நிறுவனங்களை நாடியிருக்கின்றோம் என தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு: ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | International Case Against Sri Lanka

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனில் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார நெருக்கடி எரிபொருள் இறக்குமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்றி எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

எனவே இந்த நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் தொடர்ந்தும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார். எம்மால் விடுக்கப்படும் கடன் கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஒரு எரிபொருளையோ அல்லது சமையல் எரிவாயுவையோ பெற்றுக் கொள்ள முடியாது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு: ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | International Case Against Sri Lanka

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024