இலங்கை துடுப்பாட்டத்துக்கு பேரிடி - விதிக்கப்படவுள்ள சர்வதேச தடை..!
சர்வதேச துடுப்பாட்ட பேரவை, சிறிலங்கா துடுப்பாட்டம் மீது தடை விதிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா துடுப்பாட்ட நிறுவனத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச துடுப்பாட்ட பேரவை, சிறிலங்கா துடுப்பாட்ட பேரவையின் உறுப்புரிமையை ரத்து செய்யும் சாத்தியம் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகள்
எதிர்வரும் நாட்களில் இந்த தடை அறிவிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா துடுப்பாட்ட நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவது குறித்து சர்வதேச துடுப்பாட்ட பேரவை இன்றைய தினம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் உறுப்புரிமையை தடை செய்ய வேண்டாம் என சர்வதேச துடுப்பாட்ட பேரவையிடம், சிறிலங்கா துடுப்பாட்ட பேரவை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு முன்னதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் மீது தடை விதிக்கப்பட்டால் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியில் இலங்கையினால் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக் கால்பந்தாட்ட ஒன்றியத்திறகும் சர்வதேச ரீதியில் தடை விதிக்கபட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
