யுக்திய சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய ) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
071 859 88 00 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
822 பேர் கைது
இதேவேளை நாடளாவிய ரீதியில் 'யுக்திய' காவல்துறை நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |