முதலிடத்தில் குஜராத் - இன்றும் அபார வெற்றி..!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல்லின் இன்று (07) நடைபெற்ற 51வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி
கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர்கள் 88 ஓட்டங்கள் சேர்த்து வெற்றிக்கான சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
கைல் மேயர்ஸ் 32 பந்துகளில் 48 ஓட்டங்களும், குயிண்டன் டி காக் 41 பந்துகளில் 70 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
ஆனால் பின்னர் வந்த லக்னோ வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் மட்டும் குவிக்க முடிந்தது.
இதன்முலம் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியை 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
