ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!
தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதாவது இதுவரை இடம்பெற்ற 13 போட்டிகளில் 9 போட்டிகள் வெற்றி பெற்று 18 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மற்றைய அணிகளுக்கான தரவரிசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அணி கலந்து கொண்ட 13 போட்டிகளில் 07 போட்டிகள் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
தற்போது முதலிடம்
இந்த நிலையில், ஐந்தாம் இடத்தில் இருந்த லக்னோ அணி கலந்து கொண்ட 13 போட்டிகளில் 07 போட்டிகள் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை அணி தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்றையதினம் (16) இடம்பெற்ற போட்டியில் லக்னோ அணி அபார வெற்றிகளை பெற்றது.
இந்த வெற்றியின் பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விபரம்

