இலங்கையில் 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தில்
இலங்கையில் ஈரானிய நிபுணர்களால் 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஈரானின் எரிசக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்ராபியன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுடன் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே, ஈரானிய அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஈரானிய நிறுவனம் ஒன்று இலங்கையில் 120 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த மெஹ்ராபியன், இது கணிசமான பெறுமதியைக் கொண்டு வருவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விரைவில் நடைமுறைக்கு
அத்துடன், இத்திட்டம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், ஈரானுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து திருப்தி தெரிவித்த இலங்கை அமைச்சர், எதிர்காலத்தில் நீர் மற்றும் எரிசக்தி துறைகளில் மேலும் பல திட்டங்களை தொடங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.