அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு

United States of America Qatar United Arab Emirates Iran
By Sathangani Jul 12, 2026 08:51 AM GMT
Report

புதிய இணைப்பு

கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை இலக்கு வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இடைமறிப்பு நடவடிக்கைகளின் போது சிதறிய பாகங்களால் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கத்தாரின் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் குடிசார் பாதுகாப்புக் குழுக்களும் அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலத் திட்டங்களின்படி பதில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாம் இணைப்பு

ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.

கத்தாரின் உள்துறை அமைச்சகம் இன்று காலை இரண்டாவது முறையாக நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா

பாதுகாப்பு எச்சரிக்கை 

அதே நேரத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலைகளை உயர்த்தி, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தின.

அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல் : கத்தார் விடுத்துள்ள அறிவிப்பு | Iran Missiles Qatar Raises Security Threat Level

அண்டை நாடான கத்தாரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியது.

மேலும், குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016